இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. பொதுவாகவே அரசு விடுமுறை நாட்கள் என்பது அனைத்து வங்கிகளுக்கும் பொதுவானதாக இருக்கும். இருந்தாலும் சில முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு நாட்கள் என மாநிலத்திற்கு மாநிலம் விடுமுறை நாட்கள் வேறுபடும்.

ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 8  நாட்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சனிக்கிழமைகளை தவிர சுதந்திர தினம் மற்றும் ரக்ஷா பந்தன் ஆகியவை அடங்கும். ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10 இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 18 ஞாயிறு, ஆகஸ்ட் 24ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 26 ஜென்மாஷ்டமி. இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.