மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில் அதிரடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆப்பிள் ஐபோனின் வாய்ஸ் அசிஸ்டண்ட்டான ‘Siri’, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினால் உடனடியாகப் பதிலளிப்பதாகவும், ஆனால் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூறினால் எந்தப் பதிலும் தராமல் மௌனம் காப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் இந்த செயல் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

​இந்த விவகாரம் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை மோதிக்கொண்டு வரும் வேளையில், இந்த சர்ச்சை குறித்து ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது பதிலோ அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் குறைபாடா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது இன்னும் வெளிவராத நிலையில், இந்த விவகாரம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.