
லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025-ன் 61]-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ராத்தி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாரத் ரத்னா அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் 8-வது ஓவரில் நடந்த சம்பவம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் அவர் மொத்தம் 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 4 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடங்கும். இந்நிலையில் 59 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா திக்னேஷ் ரதி வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது அவர் கோபமாக அபிஷேக் ஷர்மாவை பார்த்து கையை வீசி தன்னுடைய சிக்னேச்சர் கொண்டாட்டமான நோட்புக் செலிபரேஷனில் ஈடுபட்டார்.
Fight between Digvesh Rathi and Abhishek Sharma 😳 pic.twitter.com/8ngcvpnIVK
— 𝑺𝒉𝒆𝒓𝒂 (@SheraVK18) May 19, 2025
இது அபிஷேக் ஷர்மாவுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்த நடுவர்கள் மற்றும் மற்ற போட்டியாளர்கள் அவர்களை பிரித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.