சீனாவில் 2022 ஆம் வருடம் முதல் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் குயின் கேங். இவர் ஜூன் 25ஆம் தேதி இலங்கை, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான செய்திகள் செய்தி நிறுவனங்கள் மூலம் வெளியாகியது. ஆனால் இந்த சந்திப்பிற்குப் பிறகு இதுவரை குயின் கேங் வெளியிடங்கள் எங்கேயும் தென்படவில்லை.

மாயமான குயின் கேங்கை சீன அரசு பல நாட்களாக தேடியும் பார்த்து விட்டது. இந்நிலையில் அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது பற்றி எந்த தகவலும் கிடைக்காத காரணத்தினால் சீன அரசு புதிய வெளியுறவுத்துறை மந்திரியை நியமித்துள்ளது. குயின் கேங்கை பதவியில் இருந்து நீக்கிவிட்டு வாங் யு இனி வெளியுறவுத் துறை மந்திரியாக செயல்படுவார் என சீன அரசு தெரிவித்துள்ளது.