தமிழ் சினிமாவில் முக்கிய இளம் ஹீரோக்களில் ஒருவர்தான் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். லவ் டுடே படத்தில் ஹீரோவாக களம் இறங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் லாபத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டிராகன். இந்த திரைப்படம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன், முதன் முதலாக பாடல் எழுதும்போது நீ நன்றாகத்தான் எழுதுகிறாய் நீயே எழுது என்று சிம்பு கூறினார். அவர் கொடுத்த ஐடியாவுக்கு பிறகு தான் “எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்” என்று பாசிட்டிவாக தொடங்கியது என்று  பெருமையாக பேசி உள்ளார்.