தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி தான் பாவனா. இவர் சூப்பர் சிங்கர் மற்றும் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆனார். இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பாவனா தனது கணவர் குறித்து பேசி உள்ளார். அதில், இந்தப் பத்து வருஷத்துல என் கூட ஒரு விடுமுறையை பிளான் பண்றதுக்கு எனது கணவர் அவ்வளவு தவிச்சாரு.

அவருடன் நண்பர்கள் அவர் கூட வேலை செய்யும் நபர்களை பார்க்கச் சென்றாலும் என்னுடைய இருப்பை கடைசி வரை அவரால் உறுதியாக சொல்ல முடியாது. அடுத்த மாசம் என்ன பண்ணப் போறீங்க அப்படின்னு கேட்பாரு. அடுத்த மாசம் இருபதாம் தேதி நாம் அனைவரும் சந்திக்கலாம் என்று நோட் பண்ணி வச்சிக்குவாங்க. ஆனா நமக்கு ஆடிக்கும் அமாவாசைக்கும் ஒரு தடவை தான் வேலை வருது. பெரிய வேலை வரும்போது நம்மால் அதை ஒதுக்கியும் வைக்க முடியாது. இந்த உலகத்தில் அவ்வளவு வேறுபாடு இருப்பதை அவர் புரிந்து கொண்டதால் தான் ஏற்றுக்கொண்டார். அனைத்தையும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார். சில நேரங்களில் கோபம் வரும்போது போடி அப்படின்னு சொல்லிட்டு ஜாலியா போயிருவாரு என பாவனா தெரிவித்துள்ளார்.