தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சசிகுமார். மே ஒன்றாம் தேதி சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அபிஷன் ஜீவந்த் இயக்கினார்.

இலங்கை பின்னணியில் எடுக்கப்பட்ட டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் பற்றி சசிகுமார் பேசிய விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அவர் கூறியதாவது, இயக்குனர் அபிஷன் ஜீவந்த் கதை சொல்லும்போது என்ன செய்தாரோ அதைத்தான் நான் செய்தேன். அதனால் தான் எனக்கு இந்த புகழ் கிடைத்துள்ளது. இயக்குனர் அபிஷன் இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுதான் படத்திற்கு ஒரு உணர்வுபூர்வமான பலம் கொடுத்தது என கூறியுள்ளார்.