
பாலிவுட் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரதீப் ராவத். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் நடித்து வரும் நிலையில் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த கஜினி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது நடிகர் அமீர்கான் நடிக்கும் படத்தில் கமிட் ஆகி இருக்கும் நிலையில் தற்போது தென்னிந்திய சினிமா பற்றி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பாலிவுட் சினிமாவை விட தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் அகங்காரம் பிடித்தவர்கள். அவர்கள் தங்கள் அருகே கூட நிற்க விடமாட்டார்கள். 5 அடி தள்ளியே தான் இருக்க வேண்டும். அதேசமயம் பாலிவுட்டில் கஜினி படத்திற்கு பிறகு கைவிடப்பட்டாலும் தென் இந்திய சினிமா தான் என்னை வாழ்வித்தது என்று கூறியுள்ளார். மேலும் இவர் பேசியது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.