இந்தியா முழுவதும் பல்வேறு அழகான கடற்கரைகளானது உள்ளது. அதில் 5 கடற்கரைகள் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி முதலிடத்தில் இருப்பது கோவாவிலுள்ள பெனிலியம் கடற்கரை. இக்கடற்கரைக்கு இந்தியர்களை விட வெளிநாட்டினர் தான் அதிகம் வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையடுத்து கொல்கத்தாவில் அமைந்திருக்கும் திகா கடற்கரை சுற்றுலா பயணிகளை அன்பு அலைகளுடன் ஆரவாரமாக வரவேற்கும் தன்மைக்கொண்டது. இந்த கடற்கரை மிகவும் சுத்தமாக காணப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

அதன்பின் புதியதாக சென்னைக்கு வருவோரும் சரி, அங்கேயே தங்கியிருப்போரும் சரி போர் அடித்தால் உடனே கிளம்பிவிடும் இடம் மெரினா தான். குறிப்பாக காதலர்களுக்கு இது மிகவும் பிடித்த இடம்.

அதேபோல் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வர்கலா. இந்த இடம் இயற்கை சுவாசத்தால் நிறைந்து இருப்பதாகவும் நோய் வாய்ப்பட்ட பல பேருக்கு இந்த இடத்தின் தூய காற்று நன்மை பயக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

அதனை தொடர்ந்து புதுச்சேரியில் பல்வேறு கடற்கரைகள் இருக்கிறது. இங்கு வருபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டினராகவோ (அ) போட்டோஷூட் வந்தவர்களாகவோ தான் இருப்பர்.