சீன நாட்டில் பான் ஸ்யோடிங் (24) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடும்  பழக்கத்தை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருவது வழக்கம். இவர் தன்னுடைய பாலோவர்ஸ் கொடுக்கும் சவால்களை பின்பற்றி அது தொடர்பாகவும் வீடியோ வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது லைவ் வீடியோவில் அதிகமாக சாப்பிட்டு காண்பிக்கிறேன் என்று கூறிவிட்டு அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டு உள்ளார். இதனால் தற்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதாவது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றவாறு அளவுக்கு மீறி உணவை சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் ‌ அவர் உயிரிழந்துள்ளதாக  மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவர் ஒரு நாளைக்கு 10 கிலோ வரை சாப்பிடுவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.