பிரபல யூடியூபரான இலக்கியாவை சோசியல் மீடியாவில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். இவர் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலக்கியா டிக் டாக் மூலம் பிரபலமானார். இவருக்கு சோசியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது யூடியூப் சேனலையும் இலக்கியா தொடங்கியுள்ளார். காட்டுப்பாக்கத்தில் வசிக்கும் இலக்கியா அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் அவருக்கு போதையாகி உடல் நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு எடுத்துள்ளனர்.
ஆனால் இலக்கியாவின் நண்பர் அவரை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையும் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இலக்கியா அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
