
தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது தமிழகத்தை நெருங்கி வருகிறது. இது வலுவடையாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும் தமிழ்நாட்டில் நவம்பர் 15ஆம் தேதி வரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரையில் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி கரூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.