உத்தர் பிரதேஷ் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் நிஷாத். இவர் தனது 2 வயது மகள் மற்றும் 9 வயது மருமகள் என இரண்டு சிறுமிகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 11000 வால்ட் சக்தி கொண்ட மின்சார வயர் இவர்களின் மீது விழுந்துள்ளது. வயர் விழுந்த உடனேயே பைக் தீ பிடித்து ஏறிய மூன்று பேரும் தீயில் எறிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை பதற செய்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மின்சாரத்துறை அறிவித்துள்ளது.