
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா உடன் வந்து கலந்துகொண்டார். அப்போது மேடையில் ரஜினி மணமக்களை வாழ்த்திவிட்டு, அவர்களுக்காக வாங்கி வந்த பரிசையும் கொடுக்க நீட்டினார். ஆனால் அதை அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தார் கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது.
பரிசை யாருமே வாங்காததால் ரஜினியே அதை மணமக்களின் பின்னால் வைத்துவிட்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலான நிலையில், அர்ஜுன் மற்றும் தம்பிராமையா குடும்பத்தார் ரஜினி கொடுத்த பரிசை வாங்காமல் அவரை அவமானப்படுத்திவிட்டதாக சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.