
பாஸ்போர்ட்டுக்கு ஒருவர் விண்ணப்பித்தால் அவர்களின் விவரம் குறித்து விசாரிக்க போலீசார் வீட்டிற்கு செல்வது உண்டு. அதுபோல அரசு வேலையில் சேர்பவர்களின் பின்னணி உள்ளிட்ட விவரம் குறித்து விசாரிக்க போலீஸ் வீட்டிற்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரசு தேர்வுக்கு படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
பலரும் விடாமல் போராடி அரசு தேர்வு கிடைக்கும் வரை தேர்வு எழுதி அதில் வெற்றி பெறுகின்றனர். அப்படி வெற்றி பெற்ற பணியில் சேர்ப்பவர்கள் பின்னணி உள்ளிட்ட விவரங்கள் குறித்து அறிய போலீஸ் வீட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த பரிந்துரைக்கு உள்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், காவல்துறைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.