
தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு விரைவு பேருந்துகளில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் க்யூ ஆர் கோடு மூலமாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுவதால் பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கால் பதித்து வருகிறது.
அந்த வகையில் அரசு விரைவு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணிகளின் வசதிக்காக டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கு பரிசு தொகையுடன் சேர்த்து சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.