கர்நாடகாவில் பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் காலை மற்றும் இரவு நேர பயணத்திற்கு என தனித்தனியாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது பகல் நேரத்தில் கட்டணம் குறைவாகவும் இரவு நேரத்தில் கட்டணம் அதிகமாகவும் வசூலிக்கப்பட்டது. தற்போது அதனை சாதாரண கட்டணமாக மாற்றி உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இரவு நேர பயண செலவை குறைக்கும் புதிய கட்டண முறையை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக வழக்கமான கட்டணம் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பயணிகள் வழக்கமான டிக்கெட் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.