
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே சோமனூரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்ற போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது நடன நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் பாமக கட்சியின் கொடியுடன் நடனம் ஆடினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் ஆகியோருக்கு கட்சிக்கொடி பயன்படுத்தப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்திற்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் அவர்கள் கொடுக்கும் விளக்கம் சரியான முறையில் இல்லாத விடில் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.