கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக ஆண்டு விழா நடைபெற்றது. அந்த ஆண்டு விழாவின்போது மாணவர்கள் சிலர் பாமக கட்சியின் துண்டினை கழுத்தில் அணிந்து கொண்டு ஜாதி பாடலுக்கு நடனம் ஆடினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இது தொடர்பாக அவர் 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் பதில் திருப்தி அளிக்காவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை மாற்றம் செய்து தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளியில் என்ன நடந்தாலும் அதற்கு தலைமை ஆசிரியர்தான் முழு பொறுப்பு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதோடு அவரை பணியிடை மாற்றம் செய்ததாகவும் கூறியுள்ளார்.