மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய ஊழியர் வருகைக்கான கைரேகை பதிவேடு தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதனைப் போலவே புதுச்சேரி மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

களப்பிரிவு மற்றும் கணக்கீடு போன்ற பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் அரசு அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வருவதில்லை எனவும் ஒரு சிலர் பணிக்கு வராமல் வருகை பதிவை நிரப்பி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் தமிழக அரசு மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் ஆதார் எண் இணைப்பு அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவேடுமுறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைவில் இதற்கான பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.