இப்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்கள் முறையே 42 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2023-க்கான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் அரசு மேலும் அகவிலைப்படியை திருத்தியமைக்கும். மேலும் இந்த திருத்தத்திற்கு பின் அகவிலைப்படி 45 சதவீதம் ஆக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜூலை 2023-க்கு முந்தைய மாதங்களுக்கான AICPI-IW தரவு அதாவது மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் அகவிலைப்படி/அகவிலை நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அரசு ஊழியர்கள் அவர்களின் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கூடுதலாக அகவிலைப்படியை பெறுகின்றனர்.

இதன் சரியான அளவு 7-வது ஊதியக் குழுவின் பே மேட்ரிக்ஸை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். இதில் பயண கொடுப்பனவும், நகர கொடுப்பனவும் அடங்கும். அதே சமயத்தில் அகவிலைப்படி அதிகரிப்பின் காரணமாக அவர்களின் ஓய்வூதிய பலன்கள், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை ஆகியவற்றில் பெரிய அதிகரிப்பு ஏற்படும். இந்த சூழ்நிலையில் நடப்பு ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் அளவிலான ஊதிய உயர்வு இருக்கும்.