
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் மாற்றுத்திறனாளி ரயில்வே ஊழியர் ஒருவர் மதுபோதையில் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை தற்போது அதிமுக ஐடி விங் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது என்று பதிவிட்டுள்ளனர். மேலும் முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அதிமுக தொடர்ந்து கூறிவரும் நிலையில் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு மாணவிகளின் பாதுகாப்பு தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக மாறிவிட்டது என்று கூறி கடும் கண்டனங்களை பதிவிட்டுள்ளது.
இராணிப்பேட்டையில் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிபோதையில் அரை நிர்வாணமாக பள்ளிக்குள் இருந்த ரயில்வே ஊழியர்.
தமிழகத்தில் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மாணவிகள். pic.twitter.com/fiFVM667xe
— AIADMK IT WING – Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) February 3, 2025