சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் பொழுது   கட்டாயமாக சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து தான் பணிபுரிய வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்  பேருந்து, ஓட்டுநர் நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிவதை தமிழ்நாடு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.