திமுக தலைமையிலான கூட்டணி 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு இதே போல் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றியது.

ஆனால் அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. ஆட்சியில் இருக்கும் போதே ஒரு கட்சி 40 தொகுதிகளையும் வெல்வது என்பது இதுவே முதல் முறையாகும்.