கர்நாடக மாநிலத்தில் இந்து ஜாகரணா வேதிகே என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த இந்து அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்டத்தின் நிர்வாகியாக சமித் ராஜ் தரகுட்டே என்பவர் இருந்தார். இவர் ஒரு தனியார் பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. அதாவது போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

முன்னதாக சமித் ராஜூவை ஜாமினில் போலீசார் விடுவித்த நிலையில் நேற்று முன்தினம் தான் அவரது செல்போன் தரவுகள் போலீசுக்கு தெரிய வரவே அதில் ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் அரசியல் தலைவராக இருக்கும் ஒரு முக்கிய புள்ளியின் ஆபாச வீடியோவும் அதில் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு தான் பல திடுக்கிடும் தகவல்கள் இது தொடர்பாக வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.