பொதுவாகவே ஒரு ஊரில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் மற்றும் போஸ்டர்கள் என இடம்பெற்று இருக்கும். இதனை நாமும் பல இடங்களில் பார்த்திருப்போம். இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் போஸ்டர் மற்றும் கொடிக்கம்பம் இல்லாத கிராமங்களை காண்பது அரிதுதான்.

அப்படி அரிதான ஒரு கிராமம் தான் திருப்பூர் அருகே உள்ள எம். நாதம்பாளையம். 1991 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது போஸ்டர் ஒட்டுவதில் அங்கு பெரிய தகராறு ஏற்பட்டது. அப்போது முதல் அரசியல் கட்சிகளுக்கு கொடிக்கம்பம் நடக்கூடாது என போன்ற பல கட்டுப்பாடுகளை ஊர்மக்கள் விதித்துள்ள நிலையில் தற்போது வரை இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.