
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் இந்திய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை இந்தியாவின் பாதுகாப்பு படை அமைப்புகள் தகர்த்து எறிந்தது. நேற்று மாலை இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளையும் இந்தியா தனது சிறப்பான செயல்பாடுகளால் முறியடித்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி கூறியதாவது, தன்னுடைய அரசியல் அனுபவத்தாலும் ராஜதந்திரத்தாலும் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி நடை போட்டுள்ள பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் வணக்கம். பாராட்டு. நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.