
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவருடன் நடிக்க பல நடிகர் நடிகைகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த நடிகையும் ஒருவர் உள்ளார். அதாவது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற வைஜெயந்திமாலா நடிகர் ரஜினி படத்தில் நடிக்க அழைக்கப்பட்ட போது மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செய்தியை நடிகர் ரஜினி ஒரு மேடையில் பகிர்ந்து உள்ளார்.
ரஜினியின் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் மாமியார் வேடத்தில் நடிப்பதற்கு அவரை அழைத்தபோது வைஜெயந்திமாலா மறுப்பு தெரிவித்துள்ளார். படக்குழுவினர் தரப்பில் மிகப்பெரிய தொகை கொடுப்பதாக கூறப்பட்ட நிலையிலும் அவர் வேண்டவே வேண்டாம் என்று மறுத்ததற்கு காரணம் அந்த திரைப்படத்தில் மாமியார் கதாபாத்திரத்திற்கும் நடிகர் ரஜினி கதாபாத்திரத்திற்கும் மோதல் ஏற்படும் காட்சிகள் அதிகமாக இருந்தது. அதனால் தன்னால் ரஜினிகாந்தை திட்ட முடியாது என்ற காரணத்திற்காக இந்த பொன்னான வாய்ப்பை அவர் மறுத்துள்ளார்.
