சிகாகோவின் ஓஹரே சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு மிரட்டலான சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, டார்மாக்கில் நிறுத்தப்பட்டிருந்த போது, நான்கு சரக்கு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் ஒரு வாகனம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மூன்று கொள்கலன்கள் திடீரென்று விமானத்தை நோக்கி இழுக்கப்பட்டன.

இதில், ஒரு கொள்கலன் விமானத்தின் இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு, பாகங்கள் பல துண்டாக்கப்பட்டு சிதறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, மற்ற இரண்டு கொள்கலன்கள் கீழே விழுந்தன. மேலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை கண்காணிப்பு கேமிரா பதிவு செய்துள்ளது, மேலும் சமூக வலைதளங்களில் “விண்டி சிட்டி வீல்மேன்” என்ற பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவின் படங்களில், கொள்கலன் இன்ஜினில் சிக்கிய நிலையில் காணப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.