உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த வருடம் ஜனவரி மாதம் பிரசித்தி பெற்ற ராமர் கோவில் திறக்கப்பட்டது. ராமர் கோவில் திறந்து ஒரு வருடம் ஆன நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். பலகட்ட பிரச்சினைகளுக்கு பிறகு பிரம்மாண்ட ராமர் கோவிலை  பாஜக அரசு கட்டி முடித்தது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் வேண்டும் என்று முதலில் கூறிய கர சேவகர் காமேஸ்வர் சவுபல் தற்போது காலமானார்.

VHP அமைப்பைச் சேர்ந்த இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு‌ முதல் ராமர் கோவில் கட்டுவதற்கு மக்களிடம் செங்கலை சேகரித்து வந்தார். கடந்த 1989 ஆம் ஆண்டு ராமர் கோவில் கட்டுவதற்கான முதல் அடிகல்லை இவர்தான் நாட்டினார். இவருக்கு 68 வயது ஆகும் நிலையில் டெல்லியில் காலமானார். மேலும் இவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.