
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நாட்டிலேயே மிகப்பெரிய மணியை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதாவது அஷ்டதட்டு எனப்படும் தங்கம், வெள்ளி, காப்பர், ஜிம், மெர்குரி, டின் என எட்டு வகையான உலோகங்கள் மூலமாக இந்த மணி தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2500 கிலோ எடை கொண்ட இதற்காக 25 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட மணி அதே மாநிலத்தில் உள்ள ஈடா என்ற மாவட்டத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 30 ஊழியர்கள் சேர்ந்து இந்த மணியை செய்துள்ளார்கள். இந்த மணி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட போது பக்தர்கள் பலரும் நேரில் வந்து வழிபட்டு சென்றார்கள். மேலும் தங்களுடைய ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனை கோவிலுக்கு எடுத்து செல்வது சவாலான விஷயமாக இருந்தது. இந்த நிலையில் ரயில் மூலமாக அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டது.