
அயோத்தி மாதிரி இங்கு ஆகக்கூடாது என்று தடை பண்ணினார்களா? அயோத்தியில் தான் முருகப்பெருமானுடைய முதல் படை வீடே தொடங்குகிறது என்று ஹெச் ராஜா பேசியுள்ளார்.
யாருக்கு உரிமை இருக்கிறது 1942 ல முகமது அலி ஜின்னா பாகிஸ்தானில் கோரிக்கை வைக்கிறார். 44 நாகூர் மாநாடு நடக்கிறது. அப்பொழுது முகமது அலி ஜின்னா சொன்னது எங்களுக்கு ஒன்று பாகிஸ்தான் கொடு, இல்ல உள்நாட்டு போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார். அப்பொழுது நம்முடைய சட்ட மேதை பீமாராவ் அம்பேத்கர் அவர்கள் தான் தெளிவாக தன்னுடைய கருத்தை தெரிவித்தார். பாகிஸ்தான் கொடுக்கின்ற காரணத்தால் நமக்கு இருக்கின்ற உள்நாட்டு போர் அது போகாது. அதுதான் இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
47 க்கு முன்பாக நாட்டை பிரிவினை செய்யக்கூடாது என்று பீமராவ் அம்பேத்கர் அவர்கள் நம்முடைய அரசியல் சட்டத்தை தந்த சட்டம் மேதை சொன்னார். அதுதான் உள்நாட்டு யுத்தத்திற்கு இந்துக்களை வம்பு இழுப்பதற்காக நவாஸ் கனி ஆடு, கோழியோடு மேலே போகிறார். ஆகவே இந்துக்கள் என்ற முறையில் இப்போதே கிள்ளி எறியாவிட்டால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது வந்துவிடும். அயோத்தி மாதிரி இங்கு ஆகக்கூடாது என்று தடை பண்ணினார்களா? அயோத்தியில் தான் முருகப்பெருமானுடைய முதல் படை வீடே தொடங்குகிறது. இந்து விரோத அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும். இதற்கெல்லாம் 2026 இல் முகூர்த்தம் குறிச்சாச்சு” என்று பேசியுள்ளார்.