அயோத்தி ராமர் கோயில் ஆனது கடந்த 22 ஆம் தேதி திறக்கப்பட்டது. பிரதமர் மோடி பிரான  பிரதிஷ்டை செய்ததை தொடர்ந்து 23ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்ட வருகிறார்கள். அனுமதி அளிக்கப்பட்ட முதல் நாளை சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் ராமரை தரிசனம் செய்தார்கள். தொடர்ந்து நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு குவிந்த வண்ணம் வருகின்றனர். அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களுடைய கூட்டம் அதிகமாக இருப்பதால் மத்திய அமைச்சர்கள் தற்போது அயோத்தி செல்ல வேண்டாம் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் அயோத்தி வரும் பக்தர்களுடைய வசதிக்காக உத்திரபிரதேச மாநில அரசு படிப்படியாக  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அயோத்தியில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கக்கூடிய டென்ட் சிட்டி எனும் கூடார நகரம் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்கும் இடங்களில் படுக்கைகள், மெத்தைகள், போர்வைகள் பொருத்தப்பட்டுள்ளன.