அயோத்தியில் இந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கு விழாவில் போது நிறுவ மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடித்த ராமர் சிலை தேர்வாகியுள்ளது. அருண் யோகிராஜ் குடும்பம் கடந்த ஐந்து தலைமுறைகளாக சிலை செய்யும் தொழிலை செய்து வருகிறது. அயோத்தி ராமர் கோயிலில் இரண்டு சிலைகள் வைக்கப்பட உள்ளன.

அதில் ஒன்று 1949 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையாகும். மற்றொரு சிலையை செய்ய மூன்று சிற்பிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தனித்தனியாக செய்த 51 அங்குலம் கொண்ட கையில் வில் ஏந்திய குழந்தை ராமர் சிலைகளுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதி்ல் சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.