உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 44 வயதான ஒரு பெண், தனது 22 வயது மருமகனுடன் ஓடி போனதால், அவரது கணவர் குழந்தைகளுடன் எஸ்பி அலுவலகத்தில் நேரில் சென்று நீதி கேட்டு முறையிட்டுள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட கணவர் ஹசீன் அகமது, தனது மனைவி தனது மருமகனுடன் மே 4ஆம் தேதி வீட்டை விட்டு சென்றதாகவும், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தம்பதிக்கு ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். “மனைவி ஓடிப்போனதால் குழந்தைகளை கவனிக்கவும், குடும்பத்தை நடத்தவும் மிகுந்த சிரமம் அனுபவிக்கிறேன்” என ஹசீன் அகமது தெரிவித்துள்ளார். தற்போதும் அவருடைய மனைவி மற்றும் மருமகன் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து உன்னாவ் எஸ்பி தீபக் புக்கர் நடவடிக்கை எடுத்து, விசாரணையை சிட்டி சிஓ சோனம் சிங்கிடம் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக CO சோனம் சிங் கூறுகையில், “பாதிக்கப்பட்ட நபர் தன்னுடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எஸ்பி அலுவலகம் வந்தார். அவரது மனைவி மே 4ஆம் தேதி வீட்டை விட்டு மருமகனுடன் வெளியே சென்றுள்ளதாகவும், வீட்டில் இருந்த பணம், நகைகள் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். முழுமையான விசாரணைக்குப் பிறகு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.