அம்மா என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்வு என அன்னையர் தின வாழ்த்து செய்தியாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் அன்னையர் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்களும் அரசியலுக்கு கட்சித் தலைவர்களும் அன்னையர் தின வாழ்த்து செய்தியை தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் அம்மா என்பது பாசம், வலிமை, தியாகம் உள்ளிட்ட வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்வு எனவும் அன்னையர் தின நாளில் தாய்மை சக்தியாக விளங்கும் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.