கேரள மாநிலத்தில் இன்று நடந்த ஒரு பயங்கர கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அர்பான் என்ற 23 வயது வாலிபர் மதுவுக்கு மிகவும் அடிமையாகியுள்ளார். இவர் இன்று தன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன்படி இன்று மாலை 4 மணியளவில் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய அம்மா மற்றும் பாட்டியை அர்பான் கொடூரமாக வெட்டி கொலை செய்தார்.

அதன் பிறகு தன்னுடைய தம்பி மற்றும் அவரின் காதலியை தீர்த்து கட்டினார். இதைத்தொடர்ந்து தன்னுடைய தம்பி காதலியின் பெற்றோரையும் அவர் கொடூரமாக கொலை செய்தார். இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 6 பேரை‌அவர் கொடூரமாக கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அர்பானை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.