தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக இருந்தவர் கமலா காமேஷ். இவர் அம்மா வேடங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர்களது 1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது 72 வயது ஆகிறது. இவர்களுக்கு உமாரியாஸ் என்ற ஒரு மகள் இருக்கிறார்.

இவர் இறுதியாக ஆர்ஜே பாலாஜியின் நடிப்பில் வெளிவந்த வீட்டுல விசேஷம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் இன்று காலை உடல் நலக்குறைவினால் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை தற்போது அவருடைய மகள் மறுத்துள்ளார். அதாவது, அவருடைய மகள் தன்னுடைய மாமியார் ரக்ஷிதா பானு (72) பானு தான் இறந்துவிட்டார் எனவும் நான் போட்ட பதிவு தவறுதலாக ஊடகங்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் தன்னுடைய மாமியார் தான் இறந்ததாகவும் தன்னுடைய அம்மா நலமுடன் இருப்பதாகவும் தற்போது உமா பரபரப்பு விளக்கம் கொடுத்துள்ளார்.