தஞ்சாவூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 33 வயது பெண் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சன்னாகுளம் தெருவை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் அத்துமீறி அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் வலுக்கட்டாயமாக மணிகண்டன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த தாயிடம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.