தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள டி கோதபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கசன் சோமையா. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த  சைதுலு மற்றும் கதரி சோமையா ஆகியோருக்கும் இடையே நிலம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் கிராமத்தில் நிகழ்ந்த திருவிழாவின் போது சைதலு சோமையா மற்றும் கலிங்கம் இருவரும் சோமையாவின் வீட்டிற்கு சென்று அவர்களை கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் சோமையாவிற்கு கால் உடைந்துள்ளது. மேலும் தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. தனது கணவரை காப்பாற்ற முயன்ற சோமையாவின் மனைவிக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை சோமையாவின் வீட்டில் இருந்த அவரின் 14 வயது மகள் பவானி பார்த்துக் கொண்டிருந்தார். தனது தாயும் தந்தையை கட்டையால் தாக்குவதை நிறுத்துமாறு அவர்கள் இருவரிடமும் கெஞ்சி உள்ளார். இந்த சிறுமியின் குரலுக்கு செவிசாய்க்காமல் தாக்குதலை தொடர்ந்துள்ளனர்.

அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.