
கடலூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முருகேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். நேற்று முன்தினம் போலீசார் இதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகேசனிடம் கொடுத்தனர்.