செல்லப்பிராணிகள் எப்போதுமே நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில் மெட்ரோ ரயிலில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. ஒருவர் தனது வளர்ப்புப் பூனையுடன் மெட்ரோவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அந்தப் பூனை எதேச்சையாக அருகில் இருந்த மற்றொரு பயணியின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டது. தனது உரிமையாளரின் மடியில் தான் அமர்ந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில், மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் அந்தப் பூனை பயணத்தைத் தொடர்ந்தது.

​சிறிது நேரம் கழித்து எதேச்சையாகத் தலையைத் திருப்பிப் பார்த்த அந்தப் பூனைக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் உரிமையாளர் தள்ளி உட்கார்ந்திருப்பதை கவனித்த அந்தப் பூனை, “அடடா, நாம் இருப்பது வேறு ஒருவரின் மடியிலா?” என்பது போலக் கொடுத்த ரியாக்‌ஷன் செம்ம வைரலாகி வருகிறது. “அம்மா, நீ அங்கயா இருக்க?” என்று கேட்பது போன்ற அந்தப் பூனையின் மிரட்சியான முகபாவனையைப் பார்த்து மெட்ரோவில் இருந்த மற்ற பயணிகள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் ரசித்தனர்.