அசாம் மாநிலம் நாகோன் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருவருடைய வீட்டின் குளியல் அறையில் ஏராளமான பாம்புகள் இருந்துள்ளது. பின்பு அந்த பகுதியில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர் வரவழைக்கப்பட்டு அந்த பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்தி வன பகுதியில் கொண்டு விட்டனர் .

பாம்புகள் பதுங்கி இருந்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . அந்த வீடியோவில் ஒரு பெரிய பாறைக்கு அடியில் பல பாம்புகள் சுருண்டு கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. வீட்டில் இருந்து கொத்து கொத்தாக பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.