
தெலுங்கானா மாநிலம் மெகபூபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கோடை காலத்தை சமாளிக்க மக்கள் பழச்சாறு, கரும்பு ஜூஸ் கடைகளை நோக்கி செல்வார்கள். டோரன்கல் பகுதியில் கரும்புச்சாறு கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு ஒரு பெண் ஜூஸ் குடிப்பதற்காக வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முடி எந்திரத்தில் சிக்கிக் கொண்டது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்கள் அடுத்த நொடியே எந்திரத்தின் மின் சேவையை துண்டித்தனர். அதன்பிறகு எந்திரத்தை எதிர் திசையில் கைகளால் சுற்றி அந்த பெண்ணை காப்பாற்றி விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram