
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவர் ஜெயம் ரவி என்ற பெயரை சமீபத்தில் மாற்றிக்கொண்டார். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி திடீரென அறிவித்தார்.
இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆர்த்தி தன்னிடம் கலந்து ஆலோசனை செய்யாமல் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் முதலில் இருவரும் அதனை மறுத்தாலும் தற்போது ஜோடியாக பல இடங்களுக்கு செல்வதால் அது உண்மை என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக கலந்து கொண்ட நிலையில் ஆர்த்தி தன்னுடைய மகன்களுக்காக மட்டும்தான் அமைதியாக இருக்கிறேன் எனவும் நான் இன்னும் ஆர்த்தி ரவி தான் என்னை யாரும் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் எனவும் அறிக்கை வெளியிட்டார்.
இதனால் தற்போது கெனிஷாவும் தன்னுடைய instagram பதிவில் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளை கொண்ட பெண்ணிடம் ஈர்க்க மாட்டார். அவருக்கு அமைதியை கொடுக்கும் பெண்ணிடம் மட்டுமே இதயம் செல்லும்.
அந்தப் பெண்ணின் கனிவு என்பது நிச்சயம் ஒரு பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாகவே இருக்கும். அப்படி இருக்கும்போது இருவரும் அவரவர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இவருடைய பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.