செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக  தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதன் காரணமாக தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலுக்கு செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதன் காரணமாக அவரை நியமித்துள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.