
திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் விக்ரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட திமுக நிர்வாகிகளை மாற்றம் செய்து வருகிறார். அதன்படி விழுப்புரம் மாவட்டம் தெற்கு கழக பொறுப்பாளராக கௌதம் சிகாமணி நியமிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக இருந்த செஞ்சி மஸ்தான் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் ப.சேகர் நியமிக்கப்பட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் தற்போது அமைச்சர் செஞ்சு மஸ்தானுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். மேலும் அதன்படி அவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இது திமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.