ஜார்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஹேமந்த் சோரன் கட்சி ஆட்சியில் இருக்கிறது. வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 5  ஐந்து ஆண்டு பதவி காலம் முடிவுக்கு வருகிறது. முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 20 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் பாஜக வேட்பாளரான சீதா சோரன் ஹேமந்த சோரனின் அண்ணி ஆவார். கடந்த ஜனவரி மாதம் ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்த பிரச்சனை காரணமாக சீதா சோரன் பாஜகவில் இணைந்து விட்டார். இப்போது ஜாம்தாரா தொகுதியின் பாஜக வேட்பாளராக சீதா சோரன் நிறுத்தப்பட்டுள்ளார். இதே தொகுதியில் முக்தி மோர்ச்சா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரும் அமைச்சருமான இர்ஃபான் அன்சாரி எதிர்த்து போட்டியிடுகிறார். இர்பான் அன்சாரி சீதா சோரனை கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சீதா சோரன், கண்ணீர் விட்டபடி இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் என்னைப் பற்றி அன்சாரி தவறாக பேசுகிறார். என்னை அவதூறாக பேசியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒட்டுமொத்த பழங்குடியின பெண்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பு இது. அவரை பழங்குடியின சமூகத்தினர் ஒரு காலம் மன்னிக்க மாட்டார்கள். கணவரை இழந்த என்னை அவர் அவதூறாக பேசியுள்ளார் என கண்ணீர் விட்டார். அவருக்கு பாஜக எம்பி விவேக் தாகூர் ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.