ஆக்ராவில் சமூக வலைதளம் மூலம் பெண் ஒருவரை ஏமாற்றி இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞன் தனக்கு சொந்தமாக பி எம் டபிள்யூ கார் இருப்பதாகவும், தான் அமெரிக்காவில்  வேலை பார்த்து வருவதாகவும், கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்து காதல் வயப்பட்ட அந்த பெண் அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அவர் கூறியது பொய் என்று தெரியவந்துள்ளது.

அந்த இளைஞன் தனது நண்பனின் காரை தனது கார் என்று புகைப்படம் எடுத்தும், தான் வேலை செய்யும் நிறுவனம் தனியார் நிறுவனம்; ஆனால் தான்  வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக கூறியும் அந்தப் பெண்ணை ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் தொடர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் இதுபோன்று சமூக வலைதளம் என்னும் மாய வலையை நம்பி ஏமாறுவது வழக்கமாகி வரும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வு அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.