அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வடகொரியா தனது ‘சூப்பர் பவர்’ ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்து உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திட எரிபொருள் மூலம் இயங்கும் இந்த ஏவுகணை, அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை கொண்டது என்பதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நடந்து வரும் போரில் ஈரானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், தேவைப்பட்டால் உதவத் தயார் என வடகொரியா அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ராணுவப் படைகளை அனுப்பி உதவி வரும் வடகொரியா, இப்போது அமெரிக்காவிற்கு எதிராகத் தனது பலத்தைக் காட்டி வருகிறது.
இந்த ஏவுகணைச் சோதனை மற்றும் வடகொரியாவின் நிலைப்பாடு காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழல் மேலும் சிக்கலாகி சர்வதேச அளவில் போர் அச்சத்தை அதிகரித்துள்ளது.
